தமிழகத்தில் 67 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக அரசு அறிவித்துளளது.
தமிழகம் முழுவதும் 67 லட்சத்து 23 ஆயிரத்து 682பேர் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அக்-31,2022 வரையிலான தரவின்படி தமிழகத்தில் மொத்தம் 67,23,682 பேர் அரசு வேலைக்கு பதிவுசெய்து காத்திருக்கின்றனர்.
இதில் 31 லட்சத்து 40 ஆயிரத்து 532 பேர் ஆண்கள், 35 லட்சத்து 82 ஆயிரத்து 882பேர் பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 268 பேர் என அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர். மேலும் 18 வயதிற்குள் உள்ள மாணவர்கள் 18 லட்சத்து 48 ஆயிரத்து 279 பேர், 18-30 வயதிற்குள் உள்ளவர்கள் 28 லட்சத்து 9 ஆயிரத்து 415 பேர், 30-45 வயதிற்குள் உள்ளவர்கள் 18 லட்சத்து 30 ஆயிரத்து 76 பேர், 45-60 வயதிற்குள் உள்ளவர்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 310 பேர், மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5,602 பேர் பதிவு செய்துள்ளனர்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் 1லட்சத்து 42 ஆயிரத்து 967 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என்று அந்த அறிவிப்பில் வெளியானது.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…