தமிழகத்திற்கு 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு..? மத்திய அரசு..!
தமிழகத்திற்கு 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் கொரோனா சிகிச்சை, மருந்துகள் மற்றும் படுக்கை குறித்து தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் ஏற்கெனவே தமிழகத்திற்கு 420 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. பின்னர், தமிழகத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில் 519 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்திற்கு 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அதனையடுத்து கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.