ஈரானில் சிக்கி தவிக்கும் 650 மீனவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்கப்பெற்ற வேண்டும் எனவும், அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக நாடுகள் பெரும்பாலானவையும் ஊரடங்கை அமல்படுத்தியதால், பொது போக்குவரத்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனால், ஈரான் நாட்டில் மீன்பிடிக்க சென்ற 650 தமிழக மீனவர்கள் அங்கு சிக்கி தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்
அதில், ‘ தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 650 மீனவர்கள் ஈரானில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு அங்கு உணவு, குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆகவே மத்திய அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களுக்கு உணவு, குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் எனவும், அவர்கள் விரைவில் நாடு திரும்ப வழிவகை செய்யவேண்டும்.’ எனவும் கடிதத்தில் முதலவர் பழனிச்சாமி மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…