ஈரானில் சிக்கிதவிக்கும் 650 மீனவர்கள்.! தமிழக முதல்வர் கடிதம்.!

Default Image

ஈரானில் சிக்கி தவிக்கும் 650 மீனவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்கப்பெற்ற வேண்டும் எனவும், அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக நாடுகள் பெரும்பாலானவையும் ஊரடங்கை அமல்படுத்தியதால், பொது போக்குவரத்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனால், ஈரான் நாட்டில் மீன்பிடிக்க சென்ற  650 தமிழக மீனவர்கள் அங்கு சிக்கி தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்

அதில், ‘ தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 650 மீனவர்கள் ஈரானில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு அங்கு உணவு, குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆகவே மத்திய அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களுக்கு உணவு, குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் எனவும், அவர்கள் விரைவில் நாடு திரும்ப வழிவகை செய்யவேண்டும்.’ எனவும் கடிதத்தில் முதலவர் பழனிச்சாமி மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
mk stalin
Santhanam DD Next level trailer
Premalatha Vijayakanth
premalatha vijayakanth
Kolkata FireAccident
Manjolai - TN Govt