அனைத்து மாநிலங்களுக்கும் நிவாரண உதவித்தொகை வழங்கிய 65 வயது மூதாட்டி.!

Default Image

 மதுரை ஆத்திகுளம் எனும் ஊரை சேர்ந்த 65 வயது மூதாட்டியான கார்த்திகா பாலநாயகன் தனது ஓய்வூதிய பணத்திலிருந்து அனைத்து மாநில முதல்வர் நிவாரண திட்டத்திற்கும் தலா 100 ரூபாய் மணிஆர்டர் செய்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் நாட்டில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்காததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெருகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் வருமானமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை அளிக்குமாறு மத்திய மாநில அரசுகள் கேட்டுக்கொண்டன. அதன் பேரில் பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை ஆத்திகுளம் எனும் ஊரை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டியான கார்த்திகா பாலநாயகன். இவரது கணவர் மறைந்த காவல் ஆய்வாளர் ஆவார். இவர் தனது ஓய்வூதிய பணத்திலிருந்து அனைத்து மாநில முதல்வர் நிவாரண திட்டத்திற்கும் தலா 100 ரூபாய் மணிஆர்டர் செய்துள்ளார். இவரது இந்த செயலை மத்திய அமைச்சர் ரவிசங்கர் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்