தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 65 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 65 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில், இன்று ஒரே நாளில் 5,105 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,56,385 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,250 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,014 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 65 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,252 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்த 65 பேரில், தனியார் மருத்துவமனையில் 39 பேரும், அரசு மருத்துவமனையில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,415 ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 597 பேரும், திருவள்ளூரில் 583 பேரும், மதுரையில் 398 பேரும், கோவையில் 491 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.