சிகிச்சைக்கு வாரத்தில் இரு நாள் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும், அதற்கு போதுமான பாதுகாப்பு வசதிகளை காவல்துறை செய்து தராததால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை களைந்தால் சிறைக்கைதிகளின் மரணத்தை தவிர்க்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறையில் குடிநீர் வசதி, சுகாதார வசதி ஏற்படுத்தி தர வேண்டும் பெண்களுக்கு தேவையான உடைகள் மருந்து வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மனித உரிமை ஆணைய உத்தரவுப்படி, மனநலம் பாதித்தவர்களை சிறையில் வைத்திருக்க கூடாது. ஆனால் சிறைகளில் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில கைதிகள் மனநலம் பாதித்துள்ளனர்.
வயோதிகம் காரணமாக ஏராளமான கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்… அதனால் 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்தும், மனநலம் பாதித்தவர்களை சிறையிலிருந்து மனநல மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வது குறித்தும் அரசு பரிசீலிக்கும்படி உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் வைகை அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது, அறிக்கையில் கூறப்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அறிக்கை மீது அரசு எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவ.13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
dinasuvadu.com