65 வயதுக்கு மேல் உள்ள கைதிகள் இனி விடுதலை…!!

Default Image

தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன் கூட்டியே விடுவிப்பது குறித்து பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மூத்த வழக்கறிஞர் வைகை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

சிறைகளில் கைதிகள் மரணமடைவது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு மாநில அரசுகளுக்கு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம், தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு சிறையில் கைதிகள் மரணம் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை சரியில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, சிறைகளில் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி நீதிமன்றத்துக்கு உதவியாக மூத்த வழக்கறிஞர் வைகை நியமித்து உத்தரவிட்டனர்.மூத்த வழக்கறிஞர் வைகை, வேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட சிறைகளில் ஆய்வு நடத்தி ஆரம்பகட்ட அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.அந்த அறிக்கையில், சிறை மருத்துவமனைகளில் அடிப்படை மருத்துவ வசதிகள் மட்டுமே இருப்பதால், நிபுணத்துவம் பெற்ற மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவதற்கு அரசு மருத்துவமனைகளுக்கு கைதிகளை கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

சிகிச்சைக்கு வாரத்தில் இரு நாள் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும், அதற்கு போதுமான பாதுகாப்பு வசதிகளை காவல்துறை செய்து தராததால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை களைந்தால் சிறைக்கைதிகளின் மரணத்தை தவிர்க்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறையில் குடிநீர் வசதி, சுகாதார வசதி ஏற்படுத்தி தர வேண்டும் பெண்களுக்கு தேவையான உடைகள் மருந்து வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மனித உரிமை ஆணைய உத்தரவுப்படி, மனநலம் பாதித்தவர்களை சிறையில் வைத்திருக்க கூடாது. ஆனால் சிறைகளில் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில கைதிகள் மனநலம் பாதித்துள்ளனர்.

வயோதிகம் காரணமாக ஏராளமான கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்… அதனால் 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்தும், மனநலம் பாதித்தவர்களை சிறையிலிருந்து மனநல மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வது குறித்தும் அரசு பரிசீலிக்கும்படி உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் வைகை அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது, அறிக்கையில் கூறப்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அறிக்கை மீது அரசு எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவ.13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்