குறையும் உயிரிழப்பு.. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 64 பேர் உயிரிழப்பு!

Published by
Surya

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. அதன்படி, இன்று ஒரே நாள் 64 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,528பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,86,052 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 991 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 145,606 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 64 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,154 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்த 64 பேரில், தனியார் மருத்துவமனையில் 22 பேரும், அரசு மருத்துவமனையில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 58 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,921 ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 469 பேரும், திருவள்ளூரில் 459 பேரும், மதுரையில் 369 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Published by
Surya

Recent Posts

LIVE : ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் முதல் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு வரை.!

சென்னை : தமிழகமே பெரிதும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.…

2 minutes ago

கார் மீது ஆட்டோ மோதி விபத்து… நடுரோட்டில் டிரைவரிடம் வாக்குவாதம் செய்த ராகுல் டிராவிட்.!

கர்நாடகா : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள்  கேப்டன் ராகுல் டிராவிட் கார் மீது ஆட்டோ மோதிய சம்பவம் பரபரப்பை…

15 minutes ago

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்!

டெல்லி : டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், இன்று ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), மில்கிபூர் (உ.பி.) தொகுதிகளிலும்…

51 minutes ago

தொடங்கியது ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு.! பதற்றமான வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு.!

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்…

1 hour ago

அந்த படத்தை பார்த்து தான் கார்த்திக் சுப்புராஜ் ரெட்ரோ வாய்ப்பு கொடுத்தாரு! மனம் திறந்த பூஜா ஹெக்டே!

சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…

12 hours ago

கும்பமேளா கூட்டநெரிசல் : ‘ அவ்வளவு பெரிய சம்பவம் இல்லை ‘ பாஜக எம்பி ஹேம மாலினி பேச்சு!

அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…

12 hours ago