#Breaking: 5 மணி நிலவரம்.. தமிழகத்தில் 63.6 சதவீத வாக்குகள் பதிவு!

Default Image

தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவடையவுள்ள நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 63.65 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்களுடன் பிரபலங்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்க 1 மணிநேரம் வரை தாமதம் ஏற்பட்டது. மக்கள் சிரமமின்றி வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63.65 சதவித வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 70.79 சதவீதமும், குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 50.05 சதவீத வாக்குகள் பதிவானதாகவும், சென்னையில் 55.31 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்