#BREAKING: மருத்துவ சீட்டை விட்டுக்கொடுத்த 61 வயது ஆசிரியர்..!

நீட் நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற 61 வயதான சிவப்பிரகாசம் மருத்துவ சீட்டை விட்டுக்கொடுத்தார்.
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவக் கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான வயது உச்ச வரம்பை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து, தருமபுரியைச் சோ்ந்த 61 வயதான ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியா் கே.சிவப்பிரகாசம் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார்.
இந்நிலையில், இன்று கலந்தாய்வில் பங்கேற்க சிவப்பிரகாசத்துக்கு வாய்ப்பு கிடைத்த கலந்தாய்வில் பங்கேற்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசம் (61வயது) எந்த கல்லூரியை தேர்வு செய்யவில்லை. வேறு அரசுப்பள்ளி மாணவருக்கு மருத்துவ கல்வி வாய்ப்பு கிடைக்கட்டும் என விட்டுக்கொடுத்துள்ளார். மகனின் கோரிக்கையை ஏற்று ஓய்வுபெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசம் விட்டு கொடுத்தார். நீண்ட காலம் சேவையாற்ற முடியாது என்பதால் மருத்துவப்படிப்பு இடத்தை விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025