ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 61 வயது முதியவர் கைது!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பேருந்து ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே அருகில் இருந்த கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 61 முதியவர் அங்கு இருந்தவர்களிடம், தர்ம அடி வாங்கியதுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை செய்து வரக்கூடிய ஒரு பெண்மணி கோவையில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் கோவை சென்று விட்டு சென்னை திரும்பியுள்ளார். சென்னை சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார். இரவு 10 மணி அளவில் காட்பாடி அருகே ரயில் சென்று கொண்டிருந்த பொழுது அவர் அருகில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியுள்ளார். குறைந்தது 60 வயதிற்கு மேல் இருக்கக் கூடிய இந்த முதியவர் பாலியல் தொல்லை கொடுக்கவே அதிர்ச்சி அடைந்த பேராசிரியர்கூச்சலிட்டுள்ளார்.
இதனை பார்த்த சக பயணிகள் முதியவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும், காட்பாடி அடைந்த ரயில் உடனடியாக ரயில்வே போலீசாரிடம் தகவல் அளித்துள்ளது. அதனை அடுத்து போலீஸ் விசாரணையில் அந்த முதியவர் 61 வயதான ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என தெரியவந்துள்ளது. அதனையடுத்து கைது செய்து அவரை தற்போது போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.