தமிழகத்தில் 61 நாள் மீன்பிடி தடை காலம் இன்றுடன் முடிவு!
- ஏப்ரல் 15 முதல் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டிருந்தது.
- இன்றுடன் இந்த 61 நாள் மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வந்துள்ளது.
மீன் வளத்தை மேம்படுத்தும் விதமாக வருடம்தோறும் வங்கக்கடலில் விசைப் படகுகளில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடமும் ஏப்ரல் 15ம் தேதி முதல் இந்த மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. இந்த மீன் பிடி தடைகாலத்தின் போது மீனவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
6500 விசைப்படகுகள் இந்த மீன்பிடி தடைகாலத்தில் மீன் பிடிக்க செல்லாமல் இருந்தது. இந்த தடைகாலத்திலும் பைபர் மற்றும் கட்டுமரங்கள் மட்டும் அவ்வப்போது மீன்பிடிக்க கடலுக்கு சென்று வந்தது. தற்பொழுது இந்த 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் தமிழகத்தில் ஜூன் 14-ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை முதல் மீனவர்கள் மீண்டும் மகிழ்ச்சியுடன் கடலுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.