பிப்ரவரி 1_ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் மத்திய வேளாண்துறை அமைச்சகம் தொடர் முயற்சிகளை எடுத்து வருகின்றது.இந்நிலையில் இன்று வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , விவசாயிகளுக்கு குறைத்தபட்ச வருமான திட்டத்தின் படி அனைத்து மாநில அரசுகளும் 2 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பெயர்களை ஆண்டுக்கு 6000 ரூபாய் பெறும் குறைந்த பட்ச வருவாய் திட்டத்தில் இணைக்கலாம் என்று தெரிவித்துள்ளது . மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த http://pmkisan.nic.in என்ற இணைத்தை மத்திய வேளாண்துறை அமைச்சகம் தொடங்கியது.
இதையடுத்து இத்திட்டத்திற்கு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் என்று பெயரிடப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தில் பலனடையும் விவசாயிகளின் பெயர் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றது .இதையடுத்து இந்த திட்டத்தின் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் இத்திட்டத்தை இன்று மதியம் 12.30 மணி அளவில் பிரதமர் மோடி உத்திர பிரதேச மாநிலத்தில் தொடங்கி வைக்கிறார்.
அதே போல மாநிலங்களின் பல்வேறு பகுதியில் இந்த திட்டத்தின் தொடக்க விழா நடைபெறுகின்றது.இந்நிலையில் சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இத்திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கின்றார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.இந்த தொகை தலா 2 ஆயிரம் வீதம் 3 தவணையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…