செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6000 கனஅடி நீர் திறப்பு..!

Semparampaakkam

தமிழகத்தில் பருவமழை  தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது. அதேபோல், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது.

டிசம்பர் 2, 3 தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைப்பு..!

இந்த நிலையில், பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, வீராணம், தேர்வாய், கண்டிகை ஆகியவற்றில் நீரின்மேட்டம் உயர்ந்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 6000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 3,098 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.53 அடியாக உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்