வார இறுதி நாளை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!
வார இறுதி நாள் மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் இன்று கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பிற இடங்களுக்கு 300 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய இரு தினங்கள் விடுமுறை நாட்கள் என்பதால், வார இறுதி நாளான இன்று பொதுமக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு போக ஏதுவாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வார இறுதியில் பயணிக்க இதுவரை 5,303 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோருக்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை அன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகிறது.
இதற்கிடையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 9ம் தேதி முதல் 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.