30 கோடி மதிப்பிலான ஐம்பொன் நடராஜர் சிலை கண்டுபிடிப்பிடிக்கப்பட்டது.ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
திரிநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் 1982-ம் ஆண்டில் நடராஜர் சன்னதியின் இரும்பு கதவுகள் உடைக்கப்பட்டு 600 ஆண்டு பழமை வாய்ந்த ஐம்பொன்னாலான நடாரஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, மாணிக்கவாசகர் சிலை, ஸ்ரீபலி நாயகர் சிலை என 4 சிலைகளும் ஒரே நேரத்தில் கொள்ளையடிக்கப்பட்டது.
சிலை கொள்ளை குறித்து கல்லிடைக்குறித்தி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் 1984-ம் ஆண்டு கண்டுப்பிடிக்க முடியாத வழக்கு என்று இந்த கொள்ளை வழக்கை திருநெல்வேலி மாவட்ட காவல் துறையால் முடித்து வைக்கப்பட்டது.
சுமார் 36 வருடங்களாக துப்பு துலங்காத இந்த வழக்கை தூசி தட்டி எடுத்த ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான உயர்நீதிமன்ற புலன்விசாரணை குழு போலீசாரால் கண்டுபிடிக்க முடியாமல் ஒரம் கட்டிய இந்த வழக்கை தொண்டி எடுத்து அதில் துப்பு துலக்கியுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட 2 1/2 அடி உயரமுள்ள நடராஜர் சிலை தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் வெறும் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தது ஐஜி தலைமையிலான குழு.
பழம்பெருமை வாய்ந்த இந்த சிலையை 2001-ம் ஆண்டு 30 கோடி ரூபாய்க்கு அந்த அருங்காட்சியகத்திற்கு கயவர்கள் விலைக்கு விற்றுள்ளனர். இந்த சிலையொடு சேர்த்து 8 சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவரப்படவுள்ளது.
இந்த அனைத்து சிலைகளையும் அங்கிருந்து மீட்டு மீண்டும் தமிழகம் கொண்டு வந்து அதற்குரிய கோயில்களில் ஒப்படைக்கும் வேலையில் ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் இறங்கியுள்ளனர்.
இந்த சிலை கடத்தல் குறித்து ஆராய்ந்த ஐஜி குழு அறநிலைய துறையின் பொய்கள் அம்பலமானது.கொள்ளையடிக்கப்பட்ட 2 அடி உயமுள்ள சிவகாமி அம்மன் சிலை மட்டும் 1985-ல் கண்டுப்பிடிக்கப்பட்டு, அந்த சிலையின் பாதுகாப்பு நலன் கருதி அதனை பக்கத்திலுள்ள சுப்ரமணியர் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை ஆவணங்களில் குறிப்பிடபட்டுள்ளது. ஆனால் இப்பொழுது உள்ள இந்த சிலை கொள்ளையடிக்கப்பட்ட சிவகாமி சிலை இல்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதன் மூலம் அறநிலைய துறையின் நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனால் இன்னும் எத்தனை சிலைகள் இக்கோயிலில் கடத்தப்பட்டதோ என்று ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு களத்தில் இறங்கியுள்ளது . மேலும் தற்போது உள்ள 15 ஐம்பொன் சிலைகளும் மாற்றப்பட்டு அவற்றிற்கு பதிலாக போலி சிலை வைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அதனால் சிலைகளை ஆஸ்திரேலியாவிற்கு கடத்திய கும்பல் யாரென்பதையும் கண்டுப்பிடித்துள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், கோயிலில் உள்ள சிலைகள் குறித்தும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.
பழங்கான வரலாற்று பொருட்களை பழப்போன பணத்துக்காக பதுக்குவது வருங்கால தலைமுறையின் கண்ணில் இருந்து பழமையைமறைப்பதாகும்.இதனை தடுக்கும் பொருட்டாக அரசு செயல்பட வேண்டும்.தமிழனின் சொத்தாக தமிழ்நாட்டில் மீஞ்சி இருப்பது வரலாற்று சின்னங்கள் மட்டும் தான் இதையாவது பாதுக்கா அரசுகள் தூங்காமல் செயல்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.தூங்காமல் துணிச்சலுடன் செயல்படும் ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு மக்களிடையே பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
DINASUVADU
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…