மாண்டஸ் புயல் : கடலூரில் 60கிமீ வேகத்தில் பலத்த காற்று.! 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.!
கடலூரில் தரைக்காற்று வீசும் வேகம் அதிகரித்துள்ளது. அங்கு கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 60கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது.
சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 270 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்காலில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 200 கி.மீ தொலையில் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 13 கி.மீ வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் சாதாரண புயலாக வலுவிழக்கக்கூடும் என்றும் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது 65 முதல் அதிகபட்சமாக 85 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
அதற்கேற்றாற்போல, மாண்டஸ் புயல் காரணமாக கடலூரில் தரைக்காற்று வீசும் வேகம் அதிகரித்துள்ளது. அங்கு கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 60கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. மேலும், கடலூர் துறைமுகத்தில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடும் கடல் சீற்றத்தால் மீனவர்கள் இன்றோடு 4வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.