பொள்ளாச்சியில் நடந்த கொடூரம்!16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 6 இளைஞர்கள்!
பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருபவர் ஒரு 16 வயது சிறுமி.இவரின் தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார்.இதனால் அந்த சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் பொள்ளாச்சியில் உள்ள குமரன் நகரை சேர்ந்த இளைஞருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது.மேலும் அந்த இளைஞனும் அந்த பெண்ணை உண்மையில் விரும்புவதாக நம்பவைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 4-ம் தேதி அந்த இளைஞன் மாணவியை தமது வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார்.இதனால் காதலனின் பேச்சை மறுக்காமல் அந்த பெண்ணும் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இருவரும் வீட்டிற்குள் பலமணிநேரம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.அப்போது அந்த இளைஞரின் 5 நண்பர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர்.பின்னர் காதலன் உட்பட 6 பேரும் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து தப்பி வந்த மாணவி தமக்கு நடந்த துயரத்தை உறவினர்களிடம் கூறியுள்ளார்.அதன் பின்பு அனைத்து மகளீர் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் அன்று இரவே அந்த 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.