பணப்பட்டுவாடாவை தடுக்க 6 பறக்கும் படை – தேர்தல் ஆணையம்
பணப்பட்டுவாடாவை தடுக்க 6 குழுக்கள் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது என மாநில தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.
இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள்:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றது. இதில், 83 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீலையில், 41 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 83 பேரில் 6 பேர் வேட்புமனுக்களை திரும்ப பெற்றதால், 77 வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த், சுயட்சைகள் 5 பேர் உட்பட 6 பேர் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
இடைத்தேர்தல் – 4 முனை போட்டி:
இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோரும் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றன. எனவே ஈரோடு இடைத்தேர்தலில் பிரதமான அரசியல் கட்சிகளில் 4 முனை போட்டி நிலவுகிறது.
பறக்கும்படை:
இந்த நிலையில், இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க 6 குழுக்கள் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். பணப்பட்டுவாடா பற்றி புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் பறக்கும்படை தயாராக உள்ளது என்றும் அதிமுக புகார் கூறிய 5 வாக்குசாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் அனைத்தும் சரியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.