#ElectionBreaking : திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு…!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, திமுக – மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே கையெழுத்தாகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அணைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, திமுக – மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே கையெழுத்தாகிறது. ஒப்பந்தம் கையெழுத்திடும் போது, கூடுதல் தொகுதி கேட்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், விசிக கட்சிகளுக்கு 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், கூடுதல் தொகுதி கொடுக்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.