பூண்டி மாத கோவிலுக்கு சென்ற 6 பேர் ஆற்றில் மாயம்..! 3 பேர் சடலமாக மீட்பு..!
பூண்டி மாத கோவிலுக்கு சென்ற 6 பேர் ஆற்றில் மாயம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா பேராலயத்திற்கு, நேற்று, தூத்துக்குடியில் இருந்து, சார்லஸ் (வயது 58) என்பவர் பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ஈசாக் (39), தெர்மஸ் (19) உள்ளிட்ட பத்துக்கும் சென்றுள்ளனர்.
அவர்கள் அனைவரும் இரவில் அங்கேயே தங்கிய நிலையில், இன்று காலை சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் 6 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் 6 பேரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் 3 பேர் சடலமாக மீட்கப்படடுள்ளனர். ஏசியா 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.