விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் தீவிபத்து.! 6 பேர் படுகாயம்.!

Default Image

விருதுநகர் மாவட்டத்தில் செயல்ப்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கணிஞ்சம்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலையில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கி பலர் காயமடைந்தனர். முக்கியமாக 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் மாரீஸ்வரன், கருப்புசாமி , மாரிமுத்து , ராஜ்குமார் ஆகியோருக்கு 100 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2 தீயணைப்பு வண்டிகள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தீக்காயம்பட்ட அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்