மதுப்போதையில் காரை அதிவேகமாக ஓட்டியதால் கார் கவிழ்ந்து 6 பேர் விபத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது . கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் பார்ப்பவர்களை பீதியடைய செய்துள்ளது . இளைஞர்கள் 6 பேர் தங்களது நண்பனின் பிறந்தநாளை மொட்டையன்வயல் என்னும் கிராமத்தில் கொண்டாடியுள்ளனர்.
அதனையடுத்து மதுப்போதையில் இருந்த 6 பேரும் ஒரே காரில் அதிவேகமாக ஒட்டி வந்துள்ளனர் . அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டின் முன்பு தலைகீழாக கவிழ்ந்தது . கார் வேகமாக கவிழ்ந்ததில் காரினுள் இருந்த 2 பேர் வெளியே தூக்கி வீசப்பட்டனர். அதனையடுத்து தலைகீழாக கவிழ்ந்த காரில் இருந்து மற்றுள்ளவரும் ஒவ்வொருவராக வெளியே வந்தனர் .
கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வீசப்பட்ட 2 பேர் உட்பட 6 பேரும் லேசான காயங்களுடன் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர் . இந்த சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. தற்போது இந்த விபத்து குறித்து தேவக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . மதுப்போதையில் காரை ஓட்டி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகம் . ஒரு நிமிட சந்தோஷத்திற்காக ஒரு சிலர் வாழ்க்கையே அழிக்கின்றனர் .
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…