6 புதிய மருத்துவ கல்லூரிகள் ! முதற்கட்டமாக ரூ.137.16 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட 6 மருத்துவ கல்லூரிகளுக்கு முதற்கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மருத்துவ வசதி குறைவாக உள்ள மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.பின்பு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்ட 6 மருத்துவ கல்லூரிகளுக்கு முதற்கட்டமாக ரூ.137.16 கோடி ஒதுக்கியது மத்திய அரசு.மேலும் ,கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை ஆகிய மாவட்டங்களில் 3 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.