நளினி மகளின் திருமணத்திற்கு 6 மாதம் பரோல் கேட்டு மனு
மகள் திருமணத்திற்கு 6 மாதம் பரோல் கேட்டு நளினி மனு அளித்துள்ளார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 11க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவசரமாக பரோல் தேவை என்றால் விடுமுறைகால அமர்வை அணுகி நிவாரணம் பெறலாம் என நளினிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.