எச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை., ஆனால், சிறை செல்ல வேண்டாம்! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
பெரியார் சிலையை உடைப்பேன் என கூறிய வழக்கிலும், கனிமொழிக்கு எதிராக பதிவு செய்த அவதூறு வழக்கிலும் எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா, கடந்த 2018இல் தனது சமூக வளைதள பக்கத்தில், பெரியார் சிலையை உடைப்பேன் என்றவாறு கருத்து பதிவிட்டு இருந்தார். மேலும், திமுக எம்பி கனிமொழி குறித்து அப்போது அவதூறு கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த இரு புகார்களும் ஈரோடு மற்றும் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சென்னையில் எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேல் முன்பு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில், காவல்துறை சார்பில், எச்.ராஜாவின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து தான் கருத்து பதிவாகியுள்ளது என்று சமர்ப்பித்த ஆவணங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இரு வழக்கிலும் எச்.ராஜா குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும், இதில் ஒரு வழக்கில் 6 மாத சிறை தண்டனையும், மற்றொரு வழக்கில் 6 மாத சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தனர்.
குறைந்தது 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கப்பெற்றால் மட்டுமே குற்றவாளி உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். எச்.ராஜாவுக்கு ஓராண்டு சிறை தண்டணை விதிக்கப்பட்டுள்ளதால், மேல்முறையீடு செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மேல்முறையீட்டுக்கு ஓராண்டு காலம் அவகாசம் அளித்து சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளனர்.