நீலகிரியில் மாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை – ஆட்சியர் அதிரடி உத்தரவு.!
நீலகிரி மாவட்டம் உதகையில் மாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை.
கொரோனா அச்சம் காரணமாக நீலகிரி மாவட்டம் உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடி அறிவிப்பை வெளிட்டுள்ளார். இந்நிலையில் எனவே பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, இன்று 4,985 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,75,678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 3,861 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் மேலும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,551 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.