சென்னை வந்த விமானத்தில் 6 மாத குழந்தை உயிரிழப்பு..!
தமிழ்நாட்டை சார்ந்த சக்தி முருகன் , தீபா தம்பதியினர் ஆஸ்திரேலியாவில் கணினி மென்பொருள் பொறியாளராக வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஹிருத்தி என்ற 6 மாத குழந்தை உள்ளது. இந்த தம்பதி சென்னையில் உள்ள தங்களது பெற்றோரை பார்க்க இந்தியா வந்துள்ளனர்.
இதனால் அவர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலமாக மலேசியா வந்தனர். பின்னர் மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானத்தின் மூலம் நேற்று காலை ஒரு மணிக்கு சென்னை விமான நிலையம் வந்துள்ளனர்.
அப்போது சோதனைக்காக நின்று கொண்டிருந்தபோது ஹிருத்தி எந்தவித அசைவு இல்லாமல் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த தம்பதியினர் விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.
பரிசோதனையில் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். பின்னர் ஹிருத்தி உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விமானத்தில் ஹிருத்தி உயிருடன் இருந்ததாக பெற்றோர்கள் கூறியுள்ளனர்.