கொரோனா தடுப்பூசிக்கு பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, மத்திய அரசிடம் 2.5 கோடி தடுப்பு மருந்துகள் பெறப்பட்டு, தமிழக மக்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டையில் அம்மா மினி கிளினிக்கை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும், அதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் செயல்படுத்தபட்டுள்ளதாக கூறினார். மேலும் மத்திய அரசிடம் 2.5 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கிய பின்னர், முதலில் 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும் எனவும், தமிழகத்தில் இரண்டரை கோடி தடுப்பூசிகளை சேமித்து வைக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியே ஊழல் தான் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிகார வெறியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த…
லக்னோ : நடப்பு ஐபிஎல் போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கையில், இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல்…
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…