ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுக எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அறிவிக்கப்படும். அமமுகவிலிருந்து தொண்டர்கள் நிர்வாகிகள் மீண்டும் அதிமுகவுக்கு வரலாம் என முதல்வர் தெரிவித்தார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நிறைய திட்டங்களை அதிமுக அரசு தந்துள்ளது. மக்கள் மனம் மகிழும் வகையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை இருக்கும். குடும்பத்திற்கு மாதம் தோறும் ரூ.1,500 வழங்கப்படும் எனவும் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என மகளிர் தினத்தை ஒட்டி அதிமுக தேர்தல் வாக்குறுதியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
மேலும், அதிமுகவின் திட்டம் கசிந்ததால் அதனை தெரிந்து கொண்டு நேற்று ஸ்டாலின் இதனை அறிவித்து விட்டார் என முதல்வர் கூறினார். நேற்று ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…