சென்னையில் 3 அடி சமூக இடைவெளி 6 அடியாக அதிகரிப்பு.!
சென்னையில் கடைகளில் 3 அடி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதை 6 அடியாக அதிகரிப்பு.
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில், சமூக விலகலை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது, கடைகளின் வெளியே சானிடைசர் வைக்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை கூறினார்.
மேலும், கடைகளில் குளிர்சாதனங்களை இயக்கக்கூடாது என்றும் இதனை மீறுபவர்கள் மீது அபராதத் தொகை வசூலிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் கடைகளில் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் 3 அடி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதை 6 அடியாக அதிகரிக்க இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து, அனைத்து கடைகளில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்யவேண்டும் என்று இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.