சீர்காழி அருகே 6 குடும்பங்களை ஒதுக்கி வைத்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவர்கரை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 6 குடும்பத்தினரை கிராம தலைவர் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் கிராம தலைவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது . ஆனால், கீழமூவர்கரை கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் அந்த 6 குடும்பத்தினரையும் ஊருக்குள் விடமாட்டோம் அவர்களால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், 6 குடும்பங்களை ஒதுக்கி வைத்த விவகாரம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…