6 குடும்பங்களை ஒதுக்கி வைத்த விவகாரம்.., அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு ..!

Default Image

சீர்காழி அருகே 6 குடும்பங்களை ஒதுக்கி வைத்த விவகாரம் தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவர்கரை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 6 குடும்பத்தினரை கிராம தலைவர் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் கிராம தலைவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது . ஆனால், கீழமூவர்கரை கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் அந்த 6 குடும்பத்தினரையும் ஊருக்குள் விடமாட்டோம் அவர்களால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், 6 குடும்பங்களை ஒதுக்கி வைத்த விவகாரம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்