நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் பேச்சுவார்த்தை நடத்த மற்றும் தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க குழு அமைத்து வருகின்றனர்.
இதற்கிடையில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலத்தில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் வரும் பிப்ரவரி 3-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம்.. நாளை முதல் அமல் – முதல்வர் வேண்டுகோள்!
அதே நேரத்தில் பிப்ரவரி 4-ம் தேதி மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உடன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்நிலையில், 6 தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடக்கியுள்ளதாக மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தகவல் தெரிவித்துள்ளார். மேலும், விருதுநகர் , திருச்சி , ஈரோடு , மயிலாடுதுறை , கடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 6 தொகுதிகளில் பூத் கமிட்டி அமைத்து பணிகளை தொடங்கியுள்ளோம் எனவும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் 6 தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர், திருச்சி அல்லது திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் நான் போட்டியிட வேண்டும் என்று மதிமுகவினர் விரும்புகின்றனர். கிருஷ்ணகிரியில் நான் போட்டியிட உள்ளதாக வெளியான தகவல் தவறானது. தனி சின்னத்தில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். எங்கள் விருப்பத்தை கூட்டணி தலைவராக உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என நம்புகிறோம் என தெரிவித்தார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…