இந்த 6 தொகுதிகளில் மதிமுக போட்டியிட விரும்புமா ..?

Durai Vaiko

நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் பேச்சுவார்த்தை நடத்த மற்றும் தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க குழு அமைத்து வருகின்றனர்.

இதற்கிடையில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலத்தில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் வரும் பிப்ரவரி 3-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம்.. நாளை முதல் அமல் – முதல்வர் வேண்டுகோள்!

அதே நேரத்தில் பிப்ரவரி 4-ம் தேதி மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உடன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்நிலையில், 6 தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடக்கியுள்ளதாக மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தகவல் தெரிவித்துள்ளார். மேலும், விருதுநகர் , திருச்சி , ஈரோடு , மயிலாடுதுறை , கடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 6 தொகுதிகளில் பூத் கமிட்டி அமைத்து பணிகளை தொடங்கியுள்ளோம் எனவும்  திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் 6 தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர், திருச்சி அல்லது திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் நான் போட்டியிட வேண்டும் என்று மதிமுகவினர் விரும்புகின்றனர். கிருஷ்ணகிரியில் நான் போட்டியிட உள்ளதாக வெளியான தகவல் தவறானது. தனி சின்னத்தில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். எங்கள் விருப்பத்தை கூட்டணி தலைவராக உள்ள  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நிறைவேற்றுவார் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்