2 சிறுமிகளை 6 மாதமாக வன்கொடுமை செய்த விவகாரம்.. 75 வயது முதியவர் உட்பட 6 பேர் கைது!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே 2 சிறுமிகளை கடந்த 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வசித்து வரும் 12 மற்றும் 13 வயது சிறுமிகளை 6 மாத காலமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர், முதியவர் என மொத்தம் 6 பேர் மீது போஸ்கொ சட்டத்தின் ராசிபுரம் போலீசார் கைது செய்தனர்.
சிறுமியை வன்கொடுமை செய்ததாக 75 வயதான முதியவர் முத்துசாமி, சண்முகம் (45), செந்தமிழ் செல்வன்(30), மணிகண்டன்(31), சிவா(26), சூரியா(23) உள்ளிட்டோரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, சிறுமியை தொடர்ந்து வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் சிலரிடம் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.