தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 4,515 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில், இன்று ஒரே நாளில் 3,536 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 6,90,936 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 885 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,949 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பரவல் தமிழகத்தில் குறையத் தொடங்கிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் 4,515 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 6,42,152 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று 49 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,691 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 25 பேரும், அரசு மருத்துவமனையில் 24 பேர் மரணமடைந்தனர்.
இன்று கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னையில் இன்று 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,536 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 முதல் 60 பேர் வரை கொரோனா தொற்றால் உயிரிழக்கும் நிலையில், 5000 பேர் வரை குணமடைந்து வருவது, சற்று ஆறுதல் அளித்து வருகிறது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…