தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 6.34 டன் ஆக்சிஜன் தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகமாக பரவி வரும் நிலையில், இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பல இடங்களில் ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனையின் அத்தியாவசிய வசதிகள், மருந்துகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்து வருகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்க சில தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்து நோயாளிகளுக்கு வழங்கி வருகிறது.
இதனையடுத்து பல கட்டப் போராட்டங்களுக்குப் பின்பதாக தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அங்கும் ஆக்சிஜன் உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்பட்ட 6.34 டன் ஆக்சிஜன் தற்பொழுது தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…