தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.12 லட்சத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில், இன்று ஒரே நாளில் 4,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,65,930 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 1,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,84,429 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறையும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில் 5,177 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 6,12,320 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றால் இன்று 57 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,371 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 19 பேரும், அரசு மருத்துவமனையில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இன்று கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,441 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 முதல் 65 பேர் வரை கொரோனா தொற்றால் உயிரிழக்கும் நிலையில், 5000 முதல் 6000 பேர் வரை குணமடைந்து வருவது, சற்று ஆறுதல் அளித்து வருகிறது.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…