6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால், சுங்கச் சாவடிகளில் வரி செலுத்தாமல் செல்லும் போராட்டம் !
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உச்சநீதிமன்றம் வழங்கிய 6 வார கால அவகாசத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால், சுங்கச் சாவடிகளில் வரி செலுத்தாமல் செல்லும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
போச்சம்பள்ளியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, வேல்முருகன், மத்திய அரசுப் பணிகளில் மறைமுகமாக வடநாட்டினருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும், இதனை உடனடியாக தடுத்திடவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், வரும் 29ம் தேதி முதல் சுங்கச் சாவடிகளில் வரி செலுத்தாமல் செல்லும் போராட்டத்தை ஒருமித்த கருத்துள்ள அரசியல் கட்சிகளுடன் இணைந்து மேற்கொள்வோம் எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.