6-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு சுமார் 20 நாட்கள் வரை பெட்ரோல் – டீசல் விலை உயராமல் இருந்தது.
தேர்தலின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அது மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12-ந்தேதி முடிந்தபிறகு அடுத்த 2 நாட்களில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன. ஒவ்வொரு நாளும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை விபரம் வருமாறு:-
19-ந்தேதி ரூ.78.74 இன்று மட்டும் பெட்ரோல் 32, காசு டீசல் 25 காசு உயர்ந்துள்ளது. கடந்த 6 நாட்களில் பெட்ரோல் 1 ரூபாய் 35 காசு, டீசல் 1 ரூபாய் 48 காசு உயர்ந்துள்ளது.
இதுபற்றி நிதி ஆலோசனை நிறுவனமான கோடக் இன்ஸ்டிடியூஷனல் இக்விட்டில்ஸ் கூறுகையில் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வரும் வாரங்களில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயரலாம் என்று அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்