கடந்த திங்கள்கிழமை மட்டும், சென்னையில் கோயம்பேடு, அரும்பாக்கம் உள்ளிட்ட 14 இடங்களில் நகை மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறின. சில இடங்களில் பொதுமக்கள் கத்தியால் கிழிக்கப் பட்டு காயப்படுத்தப்பட்டனர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வழிப்பறி சம்பவங்களால், மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை முழுவதும் போலீசார் ஸ்டார்மிங் ஆபரேஷனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, வெள்ளியன்று இரவும் மேற்கொள்ளப்பட்ட தீவிர வாகனச் சோதனையில், ஒரே நாளில் நடந்த 14 வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், 6-வது நாளாக நேற்றிரவும் ஸ்டாமிங் ஆபரேஷனில் ஈடுபட்டனர். திருவல்லிக்கேணி ஈஸ்வரதாஸ் தெருவில் கோபிநாத் என்பவரின் வீட்டில் பகலில் 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போனதாக இரவு 8 மணிக்கு போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
இதேபோல், முகமது சமீர் எனும் லயோலா கல்லூரி மாணவன், நண்பர்களுக்காக கல்லூரி வாசலில் காத்திருந்தபோது, பைக்கில் வந்த இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனைப் பறித்துச் சென்றனர்.
அப்போது கூச்சலிட்டதால், அங்கு ரோந்தில் ஈடுபட்டிருந்த போலீசாரும், பொதுமக்களும் செல்போனைப் பறித்துச் சென்ற இரு சிறுவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…