6ஆம் நாளாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்புப் பயணம்…!
கருப்பு உடையுடன் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் 6ஆம் நாளான இன்று காவிரி உரிமை மீட்புப் பயணத்தை நாகை மாவட்டத்தில் மேற்கொண்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் வரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 7ஆம் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து தொடங்கிய இந்த பயணம் 6ஆம் நாளான இன்று நாகை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
காவிரியின் கடைமடைப் பகுதியான நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் தமது பயணத்தை தொடங்கிய ஸ்டாலின், மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு உடையினர் சீர்காழி சென்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.