தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 5-வது தடுப்பூசி முகாம் – அமைச்சர் சுப்பிரமணியன்

வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.10) ஐந்தாவது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 19-ஆம் தேதி இரண்டாவது தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
செப்டம்பர் 26-ஆம் தேதி மூன்றாவது தடுப்பூசி முகாம் நடைபெற்றது அக்டோபர் 3-ஆம் தேதி நான்காவது தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.10) ஐந்தாவது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025