கடந்த 26-ம் தேதி குடியரசு தினத்தன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த வகையில் மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5-ம் வகுப்பு மாணவி சஹரா கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில் தங்கள் சகோதரர், சகோதரிகள் மாயாண்டி பட்டி பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் தினமும் 7 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு சென்று மீண்டும் பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வரும்போது அவர்களுக்கு களைப்பு ஏற்படுவதாக கூறியிருந்தார். மேலும், தங்களது சகோதரிகள் பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு காட்டுவழியாக ஒத்தையடி பாதையில் வருகையில் சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் , இதனால் தங்கள் பகுதியில் இருந்து மாயாண்டி பட்டி மேல்நிலை பள்ளிக்கு செல்ல அரசு பேருந்து வசதி செய்து தர வேண்டுமென அந்த கூட்டத்தில் மாணவி சஹரா கூறினார்.
இந்நிலையில், மாணவியின் கோரிக்கை அறிந்த மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் மாணவி சஹானாவை நேரில் சந்தித்து பாராட்டினார். பின்னர் மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இன்று மாயாண்டிபட்டி முதல் மீனாட்சிபுரம் வரையில் மதுரை போக்குவரத்து பணிமனையிலிருந்து அரசு பேருந்தை இயக்க உத்தரவிட்டார். மேலும் தினமும் காலையும், மாலையும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்த பேருந்து சேவை தொடர்ந்து கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். மாணவியின் கோரிக்கையை ஏற்று பேருந்து வசதியை பெற்று தந்த சு.வெங்கடேசன் எம்.பிக்கு கிராம மக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இதனிடையே 5ம் வகுப்பு மாணவியின் கோரிக்கையானது மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு வீடியோ மூலம் அனுப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…