கிராம சபை கூட்டத்தில் பேருந்து வசதி கோரிய 5-ம் வகுப்பு மாணவி .!
- குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதையெடுத்து மதுரை மீனாட்சிபுரம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
- 5-ம் வகுப்பு மாணவி சஹரா தங்கள் சகோதரர் , சகோதரிகள் தினமும் 7 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு செல்வதால் பேருந்து வசதி செய்து தருமாறு கூறினார்.
இன்று நாடு முழுவதும் 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேறினார்.
அதேபோல டெல்லி ராஜ்பாத்தில் நடைபெற்ற இந்த குடியரசு தின விழாவில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார். இந்த விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு ,பிரதமர் மோடி , பிரேசில் அதிபர் மெசியாஸ் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதையெடுத்து மதுரை மீனாட்சிபுரம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 5-ம் வகுப்பு மாணவி சஹரா தங்கள் சகோதரர் , சகோதரிகள் மாயாண்டி பட்டி பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் தினமும் 7 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு சென்று மீண்டும் பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வரும்போது அவர்களுக்கு களைப்பு ஏற்படுவதாக கூறினார்.
மேலும் தங்களது சகோதரிகள் பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு காட்டுவழியாக ஒத்தையடி பாதையில் வருகையில் சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் , இதனால் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க தங்கள் பகுதியில் இருந்து மாயாண்டி பட்டி மேல்நிலை பள்ளிக்கு செல்ல அரசு பேருந்து வசதி செய்து தர வேண்டுமென அந்த கூட்டத்தில் மாணவி சஹரா கூறினார்.
பள்ளி ஆசிரியரின் தூண்டுதலின் பெயரிலே மாணவி சஹரா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் அவர் கூறினார். இந்த மாணவியின் துணிச்சலான கோரிக்கையை ஏற்று இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ,அரசு அதிகாரிகள் அனைவரும் மாணவி சஹரா பாராட்டினர்.
பின்னர் மீனாட்சிபுரத்தில் இருந்து மாயாண்டிபட்டி பள்ளிக்கு மாணவர்களின் நலன் கருதி அரசு பேருந்துகள் வசதி செய்து தருவதாக இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.