கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அளித்த 5-ஆம் வகுப்பு மாணவன்…!!!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில், திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் திருவருள். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில் இந்த சிறுவன் சிறு வயதில் இருந்தே சாக்ஸோபோன் வாங்க வேண்டும் என ஆசை இருந்ததால், இவர் தனது நபர்களுடன் இணைந்து கச்சேரி நடத்தி ரூ.30 ஆயிரம் சேமித்து வைத்து இருந்துள்ளான்.
இந்நிலையில் இந்த மாணவன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என நினைத்து தான் சேமித்து வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தை கொடுக்க முன் வந்தார். மேலும் இவர் தனது நபர்களுடன் இணைந்து கச்சேரி நடத்தி மேலும் ரூ.20 ஆயிரம் சேர்த்து ரூ.50 ஆயிரத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்துள்ளார்.