திமுகவில் 5-ம் நாள் நேர்காணல் தொடங்கியது.!
சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 5வது நாளாக நேர்காணல் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, முக்கிய பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்களது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இரு கட்சிகளில் சில கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்தான நிலையில், சில கட்சிகளுடன் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், திமுக ஒரு பக்கம் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறது. கடந்த 2-ம் தேதி தொடங்கிய நேர்காணல் தொடர்ந்து இன்று 5வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணல் இன்றுடன் நிறைவடையும் என கூறப்படுகிறது. திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இருந்து விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, அதிமுக பொறுத்தளவில் சுமார் 8,000 பேர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த நிலையில், ஒரே நாளில் நேர்காணலை நடத்தி முடிந்துவிட்டது. இதையடுத்து முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.