சென்னையில் 5-ம் கட்ட ஊரடங்கு! கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படுகிறதா? – மத்திய அரசு திட்டம்
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 நகரங்களில் கட்டுப்பாட்டை கடுமையாக்க முடிவு.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 4-ம் காட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், 5-ம் காட்ட ஊரடங்கும் பிறப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 154 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில், கொரோன வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள மாவட்டத்தில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
சென்னையில் இதுவரை, 13,362 பேர் பாதிக்கப்ட்டுள்ள நிலையில், 113 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, 5-ம் கட்ட ஊரடங்கில் 13 நகரங்களில் கடும் கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 நகரங்களில் கட்டுப்பாட்டை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.